வெளியீடு: தோழமை, 5டி, பொன்னம்பலம் சாலை,
கே.கே.நகர், சென்னை-78.

பக்கம்: 456 விலை ரூ.275

தமிழர்கள் தங்களின் பொற்காலத்தை மறுபடியும் மீள்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நாவல் கலையின் ஆரம்ப அடையாளங்களையும் போக்கையும் எளிதில் இந்த சந்ததி கண்டுகொள்ள, இவை போன்ற படைப்புகள் அவசியமாகின்றன. டி.எஸ்.துரைசாமி எழுதிய ‘கருங்குயில் குன்றத்துக் கொலை’ பத்திரிகையில் தொடராக வெளிவந்த சமயம் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்ச நஞ்சமானதல்ல. இந்நாவலின் பிரதான அம்சம், சடுதியில் வேகமாக உருண்டோடும் நடை. பழைமையைப் பின்தொடர்வதுதான் எல்லாவற்றிலும் பிரச்னை என்பார்கள். ஆனால், இலக்கியத்தின் எல்லா அடிப்படையும் பின்தொடர வேண்டிய அம்சம் கொண்டதுதான்!

நன்றி : ஆனந்த விகடன்