நண்பர்களே வணக்கம்!

இன்று, ஜூலை மாதம் 15-ம் நாள், தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள். ஆம், போற்றுதலுக்கும், நமது இதய நேசத்திக்கும் உரிய தமிழகத்தின் கல்வி புரட்சிக்கு காரணமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள்.

இந்த நன்னாளில் இணையதளத்தின் முலமாக தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை தமிழ் சமுகத்திக்கு கொண்டு சென்று சேர்க்கும் ஒரு சிறுபணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

ஆம், இன்று 2010-ம் ஆண்டு, ஜூலை திங்கள் 15-ம் நாள், இவ்விணையதளத்தின் பிறந்த நாள்.

எங்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக உள்ள எங்கள் நண்பர்களுக்கும், பதிப்பகதினர்களுக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்!!.

எங்களின் இந்த முயற்சி சிறக்க உங்களின் வாழ்த்துக்களையும், மேலான ஆதரவை எங்களுக்கு வழங்கிட வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
நூல் உலகம் குழு.